வாழைச்சேனை சக்சஸ் முன்பள்ளியில் சிறார்களின் பற்சுத்தம், போசாக்கு பரிசோதனை!!


மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தலோடு மட்டும் மட்டுப்படுத்திக்கொள்ளாமல் கற்கின்ற சிறார்களின் சுகாதாரத்தைப் பேணுவதற்கும் அவர்களது போஷாக்கு மட்டத்தை கண்காணிக்கும் வகையில் வாழைச்சேனை சக்சஸ் முன்பள்ளி நிருவாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில், பற்சுத்தம், போசாக்கு ஆகியவற்றை பரிசோதிப்பதற்கு கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பாடசாலை பற்சிகிச்சையாளர் திருமதி எஸ்.எப்.ஸபாயா, மருத்துவத்தாதி திருமதி பி.வசந்தி ஆகியோர் வாழைச்சேனை சக்சஸ் முன்பள்ளிக்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது, பற்சுத்தம் பற்றியும் பற்களை துலக்கும் முறை பற்றியும் உத்தியோகத்தர்களால் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டதுடன், முன்பள்ளி மாணவர்களில் பற்களும் பரிசோதிக்கப்பட்டன.