இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (08) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 28 ஆம் திகதி, நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் ஒன்றை மையப்படுத்தி ஜோஸப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி கோட்டை நீதிவானின் இல்லத்தில் பொலிஸார் அவரை ஆஜர்ச் செய்த போது எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இவ்வாறான பின்னணியிலேயே இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
