மட்டகளப்பு அருவி பெண்கள் வலையமைப்பினால் கிரான் பிரதேசத்தில் ஊட்டச்சத்து பால்மா வழங்கி வைப்பு!!


மட்டகளப்பு மாவட்டடத்தின் கோறளைபற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவானது கூடுதலான அடி நிலை கிராமங்களை கொண்ட பிரதேசமாகும்.

இப் பிரதேசத்தில் 7ம் மாத காலத்தினுள் 0-5 வயது 2567 பிள்ளைகள் உள்ளார்கள். இதில் ஓரளவான ஊட்டசத்து குறைவான பிள்ளைகள் 325 ஆகும்.

மிகவும் கூடுதலாக குறைபாடு உள்ள பிள்ளைகள் 67 பிள்ளைகள் ஆகும். தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இக் கிராமத்தில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டத்தினை எதிர் நோக்குகின்றனர்.

இதனால் இங்கு பிறக்கும் குழந்தைகளில் மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பிள்ளைகள் கூடுதலாக காணப்படுகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டு மட்டகளப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்தியா சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைந்து இன்று (13.08.2021) மட்டகளப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் கிரான் பிரதேச செயலக பிரிவுட்குட்பட்ட 40 பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து பால்மா வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி பணிப்பாளர் நாகாலிங்கம் மயூரன், பிராந்திய பல் வைத்திய அதிகாரி, கிரான் பிரதேச சுகாதர வைத்திய அதிகாரி, பொது சுகாதர தாதி அதிகாரி, மேற்ப் பார்வை குடும்ப நல உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர்.