கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கும் திருகோணமலைக்குமான தபால் புகையிரத சேவை நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று (05) மீள ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி இரவு 9.30 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படுவதுடன் திருகோணமலையிலிருந்து இரவு 7.00 மணிக்கும் புறப்படும்.
முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு வசதியுடன் இரவு தபால் புகையிரத சேவை இடம்பெறும்.