ஏறாவூர் காட்டுமாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு!!


கிழக்கிலங்கையின் சிறப்பு மிக்க அம்மன் ஆலயங்களில் ஒன்றாகவும் ஈழத்து வரலாற்றில் தீ மிதிப்பு என்னும் நிகழ்வு முதன் முதலாக இடம்பெற்ற ஆலயமாகவும் திகழும் ஏறாவூர் 04 காட்டுமாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு கடந்த 31.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 11 நாட்கள் பூசை வழிபாடுகள், பஜனை, மற்றும் ஒளி ஒலி நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று நேற்று வியாழக்கிழமை (11) தீ மிதிப்பு வைபவத்துடன் பெரு விழா நிறைவடைந்தது.

11 நாள்கள் கொண்ட இந்த திருச்சடங்கு விழாவுக்கு பல பிரதேசங்களிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன மத வேறுபாடின்றி வந்து கலந்து கொண்டு நிகழ்வகளைச் சிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.