100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பிரதேசத்தின் கதிரவெளி கிராமத்தில் த்தில் இன்று 29.08.2022 நடைபெற்றது.
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் இருபத்தொன்பதாம் நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்திலுள்ள கதிரவெளி கிராமத்தில் இன்று(29.08.2022) இடம்பெற்றது.
இப் போராட்டமானது கதிரவெளிகிராம மீனவர் சங்க கட்டிடத்திற்கு அண்மையில் ஆரம்பித்து கடற்கரையில் மக்கள் அமர்ந்தவாறு எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, இல்மனைட் அகழாதே என்ற கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.இதன் போது கிராம மக்கள் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளான சட்ட விரோத இல்மனைட் அகழ்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக தமது கோரிக்கைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளரை வரவழைத்து முன்வைத்தனர்.
இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் வாகரை பிரதேச மீனவ மற்றும் விவசாய சங்கத்தினர், பெண்கள் அமைப்பினர், பிரதேச அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் செயற்பாடுகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
100 Days of Action is People's Voice















