100 நாட்கள் செயல்முனைவின் 24 ம் நாள் போராட்டம் வவுணியாவில்


“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 24 ம் நாள் போராட்டம் இன்று (24.08.2022) புதன் கிழமை வவுணியா மாவட்டத்தின் நெடுங்கேனி நகர் முருகன் கோயிலடிக்கு முன்பாக இடம்பெற்றது.

இப் போராட்டத்தில் நெடுங்கேணி பிரதேசத்தினைச் சேர்ந்த மக்கள்,சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், கிராமிய பெண்கள் குழுக்கள், இளைஞர்கள்> மனித உரிமை செயற்பாட்டாளர் என 200 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களுக்கான சம உரிமைகள் கிடைக்கப் பெறவேண்டும் எனவும்> நாங்கள் நாட்டை துண்டாடவோ தனியரசோ கேட்கவில்லை இலங்கை நாட்டிற்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையையே கேட்கிறோம் எனக் கோரி நின்றனர்.

25ம் நாள் போராட்டமானது மன்னார் மாவட்டத்தில் நாளை (25.08.2022) வியாழக் கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது என்பதனை தெரியத்தருவதுடன்> இப்போராட்த்தினை வலுசேர்க்க இணையுமாறு வேண்டுகின்றேன்.









நன்றி

சேவையிலுள்ள
திரு.க.லவகுசராசா,
ஒருங்கிணைப்பாளர்,
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு,

24 ஆவணி 2022.