வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தை முன்னிட்டதான கொடியேற்றம் நேற்று இடம்பெற்றது.
சிவபூமி என அழைக்கப்படும் ஈழமணித்திருநாட்டின் தென்கிழக்கில் வரலாற்றுச் சிறப்புடன் இயற்கை எழில் நிறைந்த அக்கரைப்பற்று பதிதனில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் கடந்த இரு வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகோற்சவம் இடம்பெறாத நிலையில் இவ்வருடம் மகோற்சவம் இடம்பெறுகின்றது.
நேற்று அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து அங்கிருந்து கொடிச்;சீலை எடுத்துவரும் நிகழ்வு இடம்பெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் சகிதம் கொடிச்சீலை ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் அங்கு யாகபூஜைகள் நடைபெற்றதுடன தொடர்ந்து ஆலயத்தில் மூலமூர்த்திக்கான பூஜை இடம்பெற்றதுடன் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றதன் பின்னர் எழுந்தருளிய விநாயகப்பெருமான் அடியார்களினால் வீதி வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பத்தின் அருகே அமர்த்தப்பட்டார்.
கொடிக்தம்பம் அருகே இடம்பெற்ற பூஜைகளின்; பின்பு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதேநேரம் ஆலய நிருவாக சபை திருப்பணிச்சபை மகளிர் அணி ஆகியோர் இணைந்து அன்னதானம் வழங்கும் பணியை முன்னெடுத்ததுடன் இப்பணியை ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பு முன்னின்று செயற்படுத்தினர்.
கடந்த 02ஆம் திகதி வாஸ்த்து சாந்தி கிரியைகளுடன் ஆரம்பமாகி 03ஆம் திகதி இடம்பெற்ற பிராயசித்த கும்பாபிசேகம் நேற்று 04ஆம் திகதி இடம்பெற்ற கொடியேற்றம் 11ஆம் திகதிவரை இடம்பெறும் திருவிழாக்கள் 12ஆம் திகதி இடம்பெறும் பாற்குடபவனி 13ஆம் திகதி இடம்பெறும் தீர்த்தோற்சவம் கொடியிறக்கத்துடனும் 14 ஆம் திகதி இடம்பெறும் திருப்பொன்னூஞ்சல்;; பூங்காவனத்திருவிழா, 15ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூசையுடனும்; நிறைவுறும்.
ஆலயத்தலைவர் வி.சுகிர்தகுமார் தலைமையில் இடம்பெற்ற மகோற்சவத்தின் வழிபாட்டுக்கிரியைகள் யாவற்றையும் அக்கரைப்பற்று பகுதி ஆதினகுரு இலி பழனிவேல் குருக்கள் ஆசியுடன் கிரியாகிரம ஜோதி அலங்கார பூசனம் சிவாகமபானு அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீP சு.சுதர்சன் குருக்கள் மற்றும் சாதக இளஞ்சுடர் சிவஸ்ரீ சுதன் சர்மா ஆலய குரு ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வருகின்றனர்.