மட்டக்களப்பு- வலையிறவுப் பால ஆற்றில் பாய்ந்த லொறி!!


மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்தருகில் கனரக லொறி வண்டி ஒன்று வீதியைவிட்டுவிலகி ஆற்றில் வீழ்ந்த சம்பவம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியால் இரண்டு லொறிகள் சென்ற சமயம், ஒரு லொறியை மற்றய லொறி முந்திச் செல்ல முற்பட்ட போது இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றதாக தெரியவருகின்றது.

வீதியை விட்டு விலகி ஆற்றுக்கு குடைசாய்ந்த வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன்  குறித்த வாகனத்தில் இருந்த சாரதியும் நடத்துனரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வவுணதீவு பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.