மட்டக்களப்பு- முதலைக்குடா விநாயகர் விளையாட்டு கழகம் நடத்தும் முதலூர் முழக்கம் என வர்ணிக்கப்படும் மாபெரும் உதைபந்தாட்ட போட்டிகளின் இறுதி போட்டி இன்று (2022/07/03) மாலை இடம்பெற்றது.
படுவான்கரையின் முதல் ஊர் என அழைக்கப்படும் முதலைக்குடாவின் முதலைக்குடா மகா வித்தியாலய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியில் மட்டக்களப்பு ரோஜல் விளையாட்டு கழக அணியும் காஞ்சிரன்குடா ஜெகன் விளையாட்டு கழக அணியும் மோதியது.
இதில் காஞ்சிரன்குடா ஜெகன் விளையாட்டு கழக அணி மட்டக்களப்பு ரோஜல் விளையாட்டு கழக அணியினை 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலூர் முழக்க கிண்ணத்தை தனதாக்கியது.
குறித்த முதலூர் முழக்கப் போட்டியில் காஞ்சிரன்குடா ஜெகன் விளையாட்டு கழக அணி முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தினை மட்டக்களப்பு ரோஜல் விளையாட்டு கழக அணியும் மூன்றாம் இடத்தினை தாண்டியடி ஸ்ரீ முருகன் விளையாட்டு கழக அணியும் நான்காம் இடத்தினை மகிழடித்தீவு அணியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணம், பதக்கங்கள் மற்றும் பண பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.