மட்டக்களப்பு ஜெகதீசன் & சன்ஸ் எரிபொருள் விற்பனை நிலையத்தில் நேற்று(16) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் நிருவாகத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் கடடையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு சுமூகமான முறையிலும் நேர்த்தியாகவும் விரைவாகவும் பெற்றோல் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் அவர்களது மேற்பார்வையின் கீழ் இராணுவம் மற்றும் பொலிசாரது பூரண பங்களிப்புடன் சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களின் முழுமையான கண்காணிப்புடன் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களால் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு இரு வாரகாலத்திற்கு மேலாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில் இன்று 6600 லீற்றர் பெற்றோல் சுகாதாரத்துறைக்கு மாத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
