இரண்டு வாரங்களில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு!!


எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மின்சாரக் கட்டண அதிகரிப்பு அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் (28ஆம் திகதி) முடிவடைந்தது.

இதன்படி நேற்று (28ம் திகதி) ஐம்பது பொது பிரதிநிதிகளிடமிருந்து வாய்மூலமான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கிடைத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மின் கட்டண உயர்வு மற்றும் அந்தந்த மின் வகைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதி முடிவை ஆணையம் முடிவு செய்யும்.

ஆணைக்குழு எடுக்கும் aதீர்மானம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் முக்கிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.