நாளை மண்முனை வடக்கு பிரதேசத்தில் சமையல் எரிவாயு விநியோகம்!!


மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நாளை காலை 2022.07.14 ம் திகதி கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானம் மற்றும் மட்டக்களப்பு ஹிந்து கல்லூரி மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் வைத்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிவாயு வழங்கும் செயற்பாடானது GS- பிரிவின் ஊடாக வழங்கப்பட்ட குடும்ப அட்டையின் அடிப்படையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச எல்லைக்குள் வசிப்பவர் என உறுதிப்படுத்தப்பட்டு முதலில் வந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு ஒன்று என்ற அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் 700 எரிவாயு சிலிண்டர்களும், மட்டக்களப்பு ஹிந்து கல்லூரி மைதானம் 1200 எரிவாயு சிலிண்டர்களும் பகிர்ந்தளிக்கப்படும்.

ஏனைய குடும்பங்களுக்கான எரிவாயு எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும்.

கேஸ் விலை

12.5kg 5217/=

5kg 2156/=

2kg 1069/=