இலங்கையின் இரண்டாவது பெரிய விவசாய மாவட்டமாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு அறுவடைக்கான எரிபொருட்களை வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளனத்தின் முயற்சியினால் இன்று விவசாயிகளுக்கு எரிபொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மண்முனைப்பற்று கோவில்குளம் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக இந்த எரிபொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தியின் தலைமையில் விவசாயிகளுக்கான எரிபொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
வெல்லாவெளி,பட்டிப்பளை,வவுணதீவு ஆகிய விவசாய கண்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இன்றைய தினம் எரிபொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் விவசாயிகளின் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மட்;டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருட்கள் விநியோகம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
.jpeg)


