மட்டக்களப்பு மாநகரசபையின் திட்டமிடலின் கீழ் மட்க்களப்பு மாநகர மக்களின் போக்குவரத்திற்கான உடனடி தீர்வாக City Rides Batticaloa நகர பஸ் சேவை இன்று முதல் மக்கள் பாவனைக்கு விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் விலை வாசி அதிகரிப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பிரதான வர்த்தக நிலைய ஊழியர்கள் ஆகியோரின் நன்மை கருதி குறித்த சேவையானது மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பேருந்து சேவையானது வேலை நாட்களில் நாள் தோறும் காலை 6:35 தொடக்கம் மாலை 6 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 8:00 மணி தொடக்கம் 4:00 மணி வரைக்கும் வழங்கப்படவுள்ளது.