கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு அம்பிளாந்துறை ஸ்ரீசித்தி விக்னேஸ்வரர் ஸ்ரீசிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிசேக விஞ்ஞாபனம் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் நேற்று 09ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவருவதுடன் எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
13ஆம் திகதி புதன்கிழமை காலை மஹா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
கும்பாபிசேக பிரதமகுரு சிவஸ்ரீ சு.கு.விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் தலைமையில் கிரியைகள் நடைபெற்றுவருகின்றன.
பக்தர்கள் ஆலயத்தின் கும்பாபிசேகத்தினை எமது மட்டு நியூஸ் முகப்புத்தகம் ஊடாக நேரலையில் காணமுடியும்.