மட்டக்களப்பு செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனமும், சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு!!


மட்டக்களப்பு செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனமும், மாவட்ட செயலகத்தின் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஒழுங்கு செய்த வாழ்க்கைத்திறன் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வானது இன்று (04) நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

நன்னடத்தை உத்தியோகத்தர் மா.வரதராஜன் அவர்களின் வழிகாட்டலில், செவிப்புலன் வலுவற்றோர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் பூ.கஜாதீபன் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வினை மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

அதனை தொடர்ந்து செயலமர்வின் வளவாளராக கலந்து கொண்ட தமிழ் சைகை மொழியின் பணிப்பாளர் செல்வக்குமார் அவர்களால் வாழ்க்கைத்திறன் தலைமைத்துவ பயிற்சியானது முன்னெடுக்கப்பட்டது.

மேலும் பயிற்சியின் நிறைவில் செயலமர்வில் பங்குபற்றியோருக்கான சான்றிதல்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையின் விஷேட கல்விப்பணிப்பாளர் தயானந்தன் ஆகியோரும் கலந்து கொண்டதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.