‘அசாத்தியமானதை சாத்தியமாக்குவோம்’ புனித மிக்கேல் கல்லூரியின் சாரண மாணவர்களின் சைக்கிள் பவணி

தற்போதைய காலகட்டத்தில் நாட்டில் அனைவரும் எதிர்நோக்கி வரும் அசாதரண  சூழ்நிலையான எரிபொருள் தட்டுப்பட்டிற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் சைக்கிள் பவனியொன்று இன்று புனித மிக்கேல் கல்லூரியின் சாரணப் பிரிவினால் நடாத்தப்பட்டது.

இச்செயற்பாடானது இந்நாட்டில் தற்ப்போது காணப்படும் அசாதாரண  சூழ்நிலையை சாத்தியமாக்கும் வகையிலும் மக்களுக்கு சைக்கிள் பாவனையை ஊக்குவிப்பது தொடர்பான விழிப்புணர்வினை எற்படுத்தும் வகையிலும் நடைபெற்றது.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் இடம்பெற்ற பிரார்த்தனை மற்றும் அறிவுறுத்தல்களை தொடர்ந்து சைக்கிள் பவணி ஆரம்பமானது.


பாடசாலையின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மாவட்ட சாரண ஆணையாளர் வி.பிரதீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது பாடசாலையின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினரும் ஜேசுசபை துறவியுமான அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் ஆகியோர் கொடி அசைத்து சைக்கிள் பவனியை ஆரம்பித்துவைத்தனர்.

அசாத்தியமானதை சாத்தியமாக்குவோம் எனும்  தொனிபொருளில் ஆரம்பமான சைக்கிள் ஓட்ட பவனியில் சாரண மாணவர்களும், அணித்தலைவர்கள் சபை உறுப்பினர்களும், சாரணிய ஆசிரியர்களும் இணைந்து கொண்டனர்.

குறித்த சைக்கிள் ஓட்ட பவனியானது புனித மிக்கேல் கல்லூரி முன்பாக ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரிலுள்ள மணிக்கூட்டுக்கோபுரத்தின் ஊடாக பிரதான வீதி வழியாக கல்லடிப்பாலத்தை அடைந்து அங்கிருந்து காத்தான்குடி ஊடாக ஆரையம்பதி வரை சென்று அங்கிருந்து மீண்டுமாக புனித மிக்கேல் கல்லூரியை வந்தடைந்தது.