மாற்றம் நோக்கிய பதிவு- நாட்டு நிலையும் O/L பரீட்சை ஆரம்பமும்!!


சாதாரன தர பரீட்சை (O/L)பரீட்சை திங்கட்கிழமை ஆரம்பிக்க இருக்கின்றது.

மிக இக்கட்டான ஒரு‌ கால கட்டத்தில் மாணவர்கள் வாழ்வில் மாற்றம் ஒன்றை கொண்டு வரும் எக்ஸாம் ஒன்று ஆரம்பிக்க இருக்கிறது.

பரீட்சை எழுதுகின்ற மாணவர்களை வீதியால் செல்லும் போது நீங்கள் கண்டால், அவர்களை உங்கள் வாகனங்களில் ஏற்றிச் செல்ல மறக்காதீர்கள்.

நீங்கள் போகின்ற வழியில் அவர்களின் பரீட்சை நிலையங்கள் இருந்தால் அதிலோ அல்லது அதற்கு அருகாமையில் உள்ள ஒரு இடத்திலோ அவர்களை இறக்கி விடமுடியும்.

அது போல உங்கள் சொந்த வாகனங்களில் உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்பவர்களாக நீங்கள் இருந்தால் போகும் வழியில் வசிக்கும் உங்கள் குழந்தைகளின் நண்பர்களையும் கூடவே அழைத்து செல்வதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் போதுமான இட வசதியும் பொருளாதார வசதியும் இருந்தால் இந்த தடை தாண்டல் பரீட்சை முடியும் மட்டுமாவது உங்கள் பிள்ளைகளின் நண்பர்களில் ஒருவரை அல்லது இருவரை உங்கள் வீட்டில் தங்க வைத்து பராமரிக்க முடியுமாக இருந்தால் அதை விட நன்மை தரும் வேறு எந்தச் செயலும் இந்தக் காலத்தில் இல்லை.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுத்து அனுப்புகின்ற மதிய உணவு அல்லது சிற்றுண்டியோடு இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கட்டி அனுப்ப முடியுமாக இருந்தால் கட்டாயம் அதை செய்யுங்கள்.

பரீட்சைக்கு பசியோடு வரும் யாரோ ஒரு மாணவனுக்கு/மாணவிக்கு அது ஒரு சில வேளைகளில் ஒரு வேளை உணவாக அமையக் கூடும்.

நாட்டு நிலை நாம் நினைப்பதை விட மோசமாக இருக்கிறது.

உதவுவார் யார் என்று மக்கள் ஏங்கி இருக்கும் இக்கட்டான ஒரு காலகட்டத்தில், நாம் செய்கின்ற இவ்வாறான கருணையின் சிறிய செயல்கள் தான் மிகப் பெரும் உதவிகள் என்பதை மறந்து விடாதீர்கள்.