நாடு பாரிய பொருளாதார பிரச்சினையில் சிக்கியுள்ள இந்நிலையில் இராணுவத்தினர் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக யாழ்-கொடிகாமம் மத்தியில் தனியாருக்கு சொந்தமான துயிலுமில்ல காணி, இராணுவ முகாமுக்காக இன்று அளவிடப்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து அளவீடு கைவிடப்பட்டது.
