Institute of Chemistry Ceylon எனும் அரச இரசாயனவியல் கல்லூரியினால் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட Chemistry Quiz இல் தேசியரீதியில் 06 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன.
அதில் புள்ளிகளின் அடிப்படையில் முதலாவதாக மட்டக்களப்பு புனித மிக்கேல கல்லூரியும் சிசிலியா கல்லூரியும் , வின்சன்ட் கல்லூரியென 03 பாடசாலைகள் இடம்பிடித்து சாதனை படைத்திருந்தது.
பின்னர் கொழும்பு இராஜகிரியவில் நடைபெற்ற இறுதிநிகழ்வில் முதலாவதாக கொழும்பு பரியோவான் கல்லூரியும் இரண்டாவதாக மட்/ புனித சிசிலியா, மூன்றாவதாக மட்/ புனித மிக்கேல் கல்லூரியும் அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் தேசிய ரீதியில் ஆறு பாடசாலைகளுக்குள் மூன்று பாடசாலைகள் இடம்பிடித்ததும் இரண்டாவது , மூன்றாவது இடங்களை கையகப்படுத்தியதும் மட்டக்களப்பு மாவட்ட கல்விச்சமூகத்திற்கு கிடைத்த ஒரு பாரிய வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது.
