சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் ரீசேட் அறிமுக நிகழ்வும் நிர்வாக சபை பொதுக்கூட்டமும் இன்று மட்டக்களப்பு,பாசிக்குடாவில் உள்ள சன்றை ஹோட்டலில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவரும் முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் உதவி கல்வி பணிப்பாளரும் அமைப்பின் உபதலைவருமான கண.வரதராஜன்,செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன்,பொருளாளர் அக்கரைப்பாக்கியன் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாண சுவிஸ் உதயம் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கான உதவி திட்டங்களை முன்னெடுத்துவந்த சுவிஸ் உதயம் அமைப்பு கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார திட்டங்களையும் முன்னெடுத்துவருகின்றது.
சுவிஸில் உள்ள புலம்பெயர் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள சுவிஸ் உதயம் தாய்ச்சங்கமாகவும் கிழக்கு மாகாண சங்கம் அதன் செயற்பாட்டாகவும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்த சங்கத்தின் செயற்பாட்டினை எதிர்காலத்தில் வினைத்திறன் மிக்கதாக முன்கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை தாய்ச்சங்கம் முன்னெடுத்துள்ளதுடன் அதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
இந்த நிகழ்வின்போது கிழக்கு மாகாண சுவிஸ் உதயம் அமைப்பின் இலட்சினை பொறிக்கப்பட்ட ரீசேட் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.