கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் இரத்ததான நிகழ்வு!!


மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகம் வருடந்தோறும் நடாத்தி வரும் இரத்ததான நிகழ்வை இவ்வருடமும் எதிர்வரும் 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை நடாத்தவுள்ளனர்.

இந்நிகழ்வானது மட்டக்களப்பு தாண்டவன்வெளி பேடினன்ஸ் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாற்சரராஜா தலைமையில் காலை 9 மணி தொடக்கம் பி.ப 2 மணி வரை நடைபெறவுள்ளது.

தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையன் இரத்த வங்கியில் இரத்த தட்டுப்பாடு அதிகரித்துக் காணப்படுவதனால், அதிகளவிலான கொடையாளிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஒரு துளி இரத்தம் கொடுத்து ஓர் உயிரை காக்க உதவுமாறு கோட்டைமுனை விளையாட்டு கழகம் அன்புடன் அழைத்து நிற்கின்றது.