ராம் கராத்தே சங்கத்தின் தரப்படுத்தல் பரீட்சை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

வி.சுகிர்தகுமார்  

ராம் கராத்தே சங்கத்தின் தரப்படுத்தல் பரீட்சை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மிசன் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.ஹேந்திரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற தரப்படுத்தல் பரீட்சை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் சட்டத்தரணியும் வைத்தியருமான சமீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுகளில் விசேட அதிதிகளாக திருவள்ளுவர் வித்தியாலய அதிபர் மு.தங்கேஸ்வரன் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தரும் கராத்தே பயிற்றுவிப்பாளருமான சென்சி கே.பி.ரவிச்சந்திரன் ஆசிரியர் விஜயராஜா ஆகியோருடன் சிரேஸ்ட போதனாசிரியர்களான சென்சி எம்.பி.செயினுலாப்தின் மற்றும் சென்சி ரி.வேள் சென்சி எம்.திருக்குமார் சென்சி ரி.பாலகிருஸ்ணன் சென்சி ரி.சுந்தரலிங்கம் சென்சி கே.இராஜேந்திர பிரசாத்  சென்சி கே.சாரங்கன்  கே.அச்சயா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்..

இதன்போது ஆரம்ப பிரிவு மாணவர்கள் தொடக்கம் கறுப்பு பட்டி வீரர்கள் வரையானவர்களுக்கான செய்முறை பரீட்சை இடம்பெற்றதுடன் கறுப்பு பட்டியின் விசேட தரத்திற்கு உயர்த்தப்பட்டவர்களுக்கான நேர்முகப்பரீட்சையும் இடம்பெற்றது.

இதன் பின்னராக தரப்படுத்தல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் கறுப்பு பட்டியின் விசேட தரத்திற்கு உயர்வு பெற்ற வீரர்களுக்கான பட்டியும் சான்றிதழும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் சட்டத்தரணியும் வைத்தியருமான சமீம் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது பிரதம அதிதிகள் தேசிய மட்ட சாதனை மட்டுமல்லாது சர்வதேச போட்டிகளிலும் தொடரான சாதனை படைத்து வரும் கராத்தே மாணவர்களை பாராட்டியதுடன் அதிகளவான பெற்றோர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.  குறித்த மாணவர்களுக்கான பயிற்சியை கே.இராஜேந்திர பிரசாத்  சென்சி கே.சாரங்கன்  கே.அச்சயா ஆகியோரும் வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.