எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் பாரியளவில்அதிகரிப்பு?


எரிபொருள் விலைகள் இன்று(திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாய் என கூறப்படுகின்றது.

அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறே, சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.,