மட்டக்களப்பு மாநகர சபையினால் சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை (Solar panel) பெறும் திட்டம் உலகவங்கி அனுசரணையுடன் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.
மட்டக்களப்பு மாநகர சபை சந்தைக் கட்டிடத் தொகுதியின் மேல் கூரையில் இந்த சூரிய மின் பிறப்பாக்கி தகடுகள் (Solar panels) பொருத்துவதற்கான கள ஆய்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்
சுமார் 08 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் இந்த சூரிய மின் திட்டத்தின் மூலம் 40 கிலோ வாட்ஸ் அளவிலான மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தற்சமயம் ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாடுகளை கணிசமாக குறைக்கும் பொருட்டு இந்த மாற்று திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்கின்றோம்.
இந்த திட்டத்தின் வாயிலாக சந்தை தொகுதிக்கு மின்சாரத்தினை பெற்றுக்கொள்வதுடன். மாநகர சபைக்கு வருவாயையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.





