2022 மே 12ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் K.D.S.ருவான்சந்திர அவர்களினால் அரச பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் மேற்பட்டி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மின்சாரம், எரிபொருள், எரிவாயு விநியோகம் போன்றவற்றில் தடைகள் காணப்படுவதன் காரணமாக அரச பொதுச் செலவீனங்களை குறைப்பதற்காக மேற்படி கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இதன்போது அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
