இலங்கை வானொலிக் குடும்பத்தின் மூத்த முதலாவது பெண் அறிவிப்பாளர் புவனலோஜினி செவ்வாய்க்கிழமை 03.05.2022 காலமானார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், தனது 75வது வயதில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
1966ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் வர்த்தகப் பிரிவில் இணைந்து கொண்ட இவர் இலங்கை வானொலிக் குடும்பத்தின் தமிழ்ப் பிரிவின் மூத்த முதலாவது பெண் அறிவிப்பாளர் என்று அறியப்படுகின்றார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக தனது ஊடக பயணத்தை ஆரம்பித்தவர்ம் அறிவிப்பு, செய்தி வாசிப்பு, நாடகங்கள் என தனது திறமைகளை பல துறைகளிலும் வெளிக்காட்டியவர்.
50 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தை உடைய இவர், பல்வேறு விருதுகளையும், கௌரங்களையும் வெற்றி பெற்றவர். இளையவர்களின் திறைமைகளை இனம்கண்டு பல இளம் அறிவிப்பாளர்களுக்கு பயிற்சிகளையும் வழங்கியதுடன் பலருக்கும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
புவனலோஜினி கடந்த ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி மறைந்த மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவத்தின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.
