மட்டக்களப்பு- கல்லடி சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் 50வது வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வு சிவானந்தா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று(15) நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்பொழுது நிலவிவரும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் இரத்ததான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இரத்ததான நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் இதிலும் குறிப்பாக மட்டக்களப்பு ராணுவத்தினரும் தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இரத்ததான நிகழ்வில் சிவானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











