இலங்கைக்கு உடனடியாக உதவி வழங்குங்கள்- சர்வதேச நாணயநிதியத்திடம் இந்திய நிதி அமைச்சர் வேண்டுகோள்!!


சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு உதவி வழங்கவேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவாவுடனான பேச்சுவார்த்தைகளின் போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இன்று கிறிஸ்டலீனா ஜோர்ஜீவாவை சந்தித்தவேளை இலங்கையின் தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு சர்வதேச நாணயநிதியம் விரைவில் நிதிஉதவி வழங்கவேண்டும் என்ற இலங்கையின் கோரிக்;கையை இந்திய நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் உதவிகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு ஆதரவளிக்கவேண்டும் உடனடியாக நிதியுதவியை வழங்கவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.