உணவுப் பொதியின் விலை 20% உயரும்!!


டீசல் லீற்றர் ஒன்றின் விலை நேற்றிரவு முதல் 113 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மதிய உணவுப் பொதிகளின் விலை 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விலையும் அதிகரித்துள்ளதன் விளைவாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்து வருவதால் மதிய உணவுப் பொதிகளின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மதிய உணவுப் பொதிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் விநியோகிப்பதற்கும் நாங்கள் பெரும்பாலும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மினி ட்ரக் வண்டிகளையே பயன்படுத்துகின்றோம். அவை நிச்சயமாக போக்குவரத்துக் கட்டணத்தை அதிகரிப்பதோடு அது நேரடியாக எம்மைப் பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, மதிய உணவுப் பொதிகளின் விலை எவ்வளவு என எங்களால் கூற முடியாது. ஆனால் ஒரு முன்முயற்சி நடவடிக்கையாக, விலையை 20% உயர்த்த முடிவு செய்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.