நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு 19 வது திருத்தமே தற்காலிக தீர்வு!!


இலங்கை எதிர்கொண்டுள்ள தேசிய நெருக்கடிக்கு 19வது திருத்தமே தற்காலிக தீர்வு என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில் சில திருத்தங்களுடன் 19 வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் சில மாற்றங்களுடன் 19வது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதே ஒரே வழி என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கான குறுகிய கால தீர்வாக 19வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் துயரங்களை நான் அறிவேன் அதனை தீர்ப்பதற்கு அனைவரும் இணைந்து செயலாற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.