துன்பப்படும் மக்களுக்கு தாகசாந்தி எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் செங்கலடி பகுதியில் இன்றைய தினம் தாகசாந்தி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
தற்போது நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து எரிபொருளை பெறுவதற்காக நிற்கின்ற இந்த நிலையினைக் கருத்திற்கொண்டு இந்த தாகசாந்தி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அறிவு பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் அறிவு பெண்கள் வலையமைப்பின் ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது சேவையினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.