மலர்ந்திருக்கின்ற “சுபகிருது” சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிகு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றது.
புதுவருட தினமான இன்று வியாழக்கிழமை (14) காலை இவ் பூயை வழிபாடுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
மூல மூர்த்தியாகிய சுயம்புலிங்க பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றன.
இதன்போது மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
இறுதியில் ஆலய வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஆலய பிரதம குருவால் பாரம்பரிய முறைப்படி கைவிசேடம் வழங்கிவைக்கப்பட்டது.
கிரியைகள் அனைத்தும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றது.