சுபகிருது சித்திரைப்புத்தாண்டாக மலர்ந்துள்ள இன்று அதிகாலை தொடக்கம் தமிழ் மக்கள் மருத்துநீர் வைத்து நீராடி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர்.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று விசேட பூஜைகள் நடைபெற்றன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இன்று விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து விசேட சித்திரைப்புத்தாண்டு பூஜை நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை நீங்கி நாட்டின் அரசும் மக்களும் சிறக்க விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டதுடன் கைவிசேடங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அமைதியான முறையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.