தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதினக்கூட்டம் எதிர்வரும் மேதினத்தன்று மட்டக்களப்பில் நடாத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பில் எதிர்வரும் மே 1, ம் திகதி பி.ப:2, மணிக்கு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் உள்ள மீனிசைப்பூங்கா திடலில் இடம்பெறும் “மாபெரும் எழுச்சி உலகத்தொழிலாளர் தினம்” மட்டக்களப்பு,அம்பாறை மாவட்ட தமிழ்தேசிய்கூட்டமைப்பு இணைந்து இதை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான முன்ஏற்பாட்டு கலந்துரையாடல் நேற்று மாலை மட்டக்களப்பில் தமிழீழ விடுதலை இயக்க (ரெலோ)அலுவலகத்தில் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் பொ.செல்வராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள், மாநகரமுதல்வர், பிரதிமுதல்வர், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள்,வாலிபர் அணி தலைவர்;, மகளீர் அணி மட்டக்களப்பு தலைவி, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொழிற்சங்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள்,உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நல்ல ஆசோனைகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்கி இருந்தனர்.
இதற்கான ஒழுங்கமைப்பு ஏற்பாடுகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவான் தலைமையில் பிரதி முதல்வர் கௌரவ க.சத்தியசீலன் உள்ளிட்ட மாநகர சபை கௌரவ உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து மேற்கொள்ளவுள்ளனர்.
இதற்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல தொழிற்சங்கங்கள் இவ்வருட மேதின விழாவில் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கவும், நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, மின்சாரத்தடை, எரிபொருள் தட்டுப்பாடு, சகல விதமான பொருட்களுக்கான விலை ஏற்றங்களை கண்டித்தும் இவ்வருட மேதினத்தை சிறப்பிக்க முன்வந்துள்ளனர்.
இன்றய கலந்துரையாடலில் சமூகம் தராத தொழிற் சங்கங்கள் எதிர்வரும் மேதின நிகழ்வில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்தேசிய பற்றாளர்கள் தவராசா கலையரசன் பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி விபரங்களை அறிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.