அவசரகால சட்டம் நீக்கப்பட்டது- வெளியாகிய முக்கிய வர்த்தமானி!!


ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இன்று (5) நள்ளிரவுடன் இல்லாதொழிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதனை நீக்கும் வகையில் ஜனாதிபதியினால் இன்று இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.