இலங்கைத் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் வாலிபர் முன்னணியின் சமூகசேவைத் துறைப் பொறுப்பாளர் மா.கோபிநாத் அவர்களின் ஒருங்கிணைப்பில் கோயில் போரதீவை பிறப்பிடமாகவும் புலம்பெயர் தேசத்தில் (லண்டனில்) வசிக்கும் கனேஸ்வரன் ராயு அவர்களின் நிதி உதவியில் தேவைஉடைய திறமையான மாணவி ஒருவருக்கு இன்று சனிக்கிழமை (09.04.2011) துவிச்சக்கர வண்டி மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன், வாலிபர் முன்னணி செயலாளர் க.சசிந்திரன், வாலிபர் முன்னணியின் மண்முனை வடக்கு பிரதேச இணைப்பாளர் ஜனகன், வாலிபர் முன்னணி உறுப்பினர்களான வி. மேனன், பு.திலக்சன் ஆகியோரும் இந் நிகழ்வில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்து