நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து இன்று முதல் விலகியுள்ளனர்.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள், மிகவும் இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கு உரிய தீர்வுகாணுமாறு நாம் முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லை.
எனவே, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து இன்று முதல் தாம் விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ். தௌஃபீக் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகியோர் இதுவரை காலம் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து செயற்பட்டு வந்ததுடன், அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 20 ஆவது திருத்தத்துக்கும் ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.