ரம்புக்கனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இன்று(20) முற்பகல் கூடிய பாராளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு தயாராகும் அரசாங்கத்தை நீக்குவதற்கு தேவையான ஒன்றிணைந்த பிரேரணையை கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சிகள் தயார் என இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.