இன்று தேசிய எதிர்ப்பு தினம்!!


பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங் கங்கள் இன்று தேசிய போராட்ட நாளாக அறிவித்துள்ளன.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இளைஞர்களும் பொதுமக்களும் தற்போது ஆர்ப்பாட்டங்களை நடத்தி அரசாங்கத்துக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர் என அமைப்பின் உறுப்பினரான ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

அதன்படி தொழிலாள வர்க்கமும் பொதுப் போராட்டத்துக்கு ஆதரவளித்து அரசாங்கத்தை சரியான பாதையில் வழிநடத்தும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இன்று போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறோம். ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் திட்டமிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வர்த்தக சமூகம் மற்றும் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடன் அரசாங்கத்தின் மீது அழுத்தத் தைப் பிரயோகிக்கும் வகையில் ஹர்த்தால் பிரசாரமும் மேற்கொள்ளப்படலாம்.

ஏப்ரல் 28 ஆம் திகதி பாரிய வேலை நிறுத்தம் மற்றும் அதன்பின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல விடயங்களை தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.