காத்தான்குடியில் பல வீடுகளில் கொள்ளைகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைக்குண்டுடன் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யபட்ட்வரை முன்று தினங்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று சனிக்கிழமை (05) அனுமதி வழங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைகாலங்களில் பல வீடுகள் உடைத்து அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிடப்பட்டுவந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது இதனை தொடர்ந்து பொலிசார் மேற்கொண்டுவந்த விசாரணையில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை (04) காத்தான்குடி கர்ப்லா பிரதேசத்தில் வைத்து கொள்ளையன் ஒருவரை கைக்குண்டுடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் காளிகோவில் வீதி செல்வநகரைச் சேர்ந்த நிப்பிறாஸ் என்பவர் எனவும் இவர் கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் காத்தான்குடி அன்னூர் பாடசாலை வீதியில் வீடு ஒன்றில் கொள்ளையிட்ட 4 அரைப்பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையன் ஒந்தாச்சிமடம் பகுதியிலுள்ள தங்க ஆபரண கடை ஒன்றில் ஈடுவைத்த நிலையில் அதனை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்த கொள்ளையனை தொடர்ந்து பொலிஸ் தடுப்பு காவலில்வைத்து விசாரணை செய்ய நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தபபட்டபோது அவரை 3 தினங்களான 7 ம்திகதிவரை பொலிஸ்தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டார்