மட்டக்களப்பு- புகையிரத குறுக்கு வீதி விஸ்த்தரிக்கப்பட்டு கார்ப்பெட் இடபட்டது...!!


மட்டக்களப்பு மாநகரசபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விஸ்த்தரிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட புகையிரத குறுக்கு வீதிக்கான அஸ்பால்ட் - Asphalt( கார்ப்பெட் இடப்பட்டு வேலைகள் இன்று (22/1/2022) ஆம் திகதி மாநகர சபை முதல்வர் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

1983 காலப்பகுதியில் இருந்து குறித்த புகையிரத குறுக்கு வீதியானது விஸ்த்தரிக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாநகரசபையில் ஆட்சிக்கு வந்த எமது சபையினால் குறித்த வீதியானது விஸ்த்தரிக்கப்பட்டு இன்று அஸ்பால்ட் இடப்பட்டு வேலைகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த ரயில்வே குறுக்கு வீதியினது விஸ்த்தரிப்பு மற்றும் நிர்மாணப் பணிகளுக்கான பிரேரணை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் அவர்களால் முன் மொழியப்பட்டு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டதனை தொடர்ந்து குறித்த வீதி அபிவிருத்திக்கான காணியானது ரயில்வே திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றிடம் இருந்து பெற வேண்டிய தேவை இருந்தது.

இந்நிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்க காலப் பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீனேசன் அவர்களிடம் குறித்த வீதி விஸ்த்தரிப்பு தொடர்பாக மாநகர சபையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அப்போதைய போக்குவரத்து அமைச்சராக இருந்த அர்ஜுன ரணதுங்க அவர்களிடம் குறித்த வீதி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு குறித்த வீதி விஸ்த்தரிப்புக்கான காணி பெறப்பட்டது.

மட்டக்களப்பு நகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலினை குறைக்கும் நோக்கோடு குறித்த வீதியானது விஸ்த்தரிக்கப்பட்டு இன்று வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வீதிக்கான மின் குழிழ்கள் மற்றும் மிகுதி அழகுபடுத்தும் வேலைகள் விரைவில் நிறைவு செய்யப்பட்டு மக்களின் பூரண பாவனைக்காக கையளிக்கப்படும் என மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.