இந்த மாதம் 10 ஆம் திகதி அமைச்சரவை மாற்றம் ஒன்று நிகழவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் தகவல்படி, விவசாய அமைச்சு உள்ளிட்ட பல முக்கியமான அமைச்சுக்களின் அமைச்சர்கள் மாற்றப்படவுள்ளனர்.
மேலும் அண்மையில் பதவி நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுப் பதவிக்கும் புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.