மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு கலைவாணி படிப்பகத்தில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
படிப்பகத்தின் உரிமையாளர் பேரின்பம் ஜெயக்கமல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நடந்து முடிந்த அகில இலங்கை தமிழ்மொழி தினப்போட்டியில் "குறுநாடக ஆக்கத்தில்" தேசிய மட்டத்தில் முதலாம் இடம்பெற்ற அரிகரன் சப்தனா மற்றும் "கவிதை ஆக்கத்தில்" தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்ற தேவரெத்தினம் திஷாந்தனா மற்றும் 2025 தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் என அனைத்து சாதனையாளர்களும் பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அம் மாணவர்களின்பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.