மட்டக்களப்பு- வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு மின் விசிறிகள் மற்றும் மின்குமிழ்கள் அன்பளிப்பு...!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் சமுகசேவை செய்து வரும் இஸ்லாமதீன் ஸயான் அஹமட் பவுன்டேசினினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு மின் விசிறிகள் மற்றும் மின்குமிழ்கள் அன்பளிப்பு செய்யப்பட்டள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவிடம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு செயலாளர் கையளித்தார்.

குவைத் நாட்டில் பணிபுரியும் இஸ்லாம்டீன் ஸயான் அஹமட் பவுன்டேசினின் சமுக சேவையாளர் இஸ்லாம்தீனின் நிதிப்பங்களிப்பில் இவ் அன்பளிப்பு செய்யப்பட்டது.