விரைவாக முன்னெடுக்கப்படும் முகத்துவாரம் வெளிச்சவீடு முதல் சவுக்கடி வரையிலான காப்பட் வீதி அபிவிருத்திப்பணிகள்...!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்காலத்தின் போக்குவரத்து நலன் கருதி மட்டக்களப்பு நகர் பகுதியில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் வாகன நெரிசல் அற்ற நிலையில் ஏறாவூர் ஊடக இப்பாதையை பயன்படுத்தி மட்டக்களப்பு நகர் பகுதிகளுக்கு இலகுவாக செல்லும் வண்ணம் முகத்துவாரம் முதல் - சவுக்கடிவரையாக குன்றும் குழியுமாக காணப்பட்ட பாதையை தற்போது விஸ்தரிப்பு செய்து காப்பட் வீதியாக மாற்றும் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றது.

தற்போது இப்பாதையானது முகத்துவாரம் வெளிச்ச வீட்டில் இருந்து ஆரம்பமாகி சவுக்கடி வரையிலான 6.5 கிலோ மீட்டர் காப்பட் வீதியாக செப்பனிடப்படவுள்ளதுடன், ஆறு மாத காலத்திற்குள் வீதி நிர்மாணப் பணிகள் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.