அடிப்புற அரங்கச் செயற்பாட்டுப் பேரவையின் இராம நாடகம் வடமோடிக் கூத்தாற்றுகையின் இறுவெட்டு வெளியீடு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் அரடிப்புற அரங்கச் செயற்பாட்டுப் பேரவையின் முன்னெடுப்பில் 2018, 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பிளாந்துறையில் உருவான இராம நாடகம் வடிமோடிக் கூத்தின் இறுவெட்டு வெளியீடும், அதில் ஆடிய கலைஞர்களுக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வும் அடிப்புற அரங்கச் செயற்பாட்டு பேரவையின் தலைவர் திரு.சு.சந்திரகுமாரின் தலைமையில் அம்பிளாந்துறை கலாசார மண்டபத்தில் 28/11/2021 அன்று பி.ப 2.00 மணியளவில் செவ்வனே நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி. புளோரன்ஸ் பாரதி கென்னடி அவர்களும், நிகழ்நிலை ஊடான மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல்துறை, தமிழியற்புலத்தின் தலைவரும், தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வங்கள் நடுவத்தின் இயக்குனருமான (பொ) தமிழ்ச்செம்மல், முனைவர் போ.சத்தியமூர்த்தி அவர்களும், கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் தலைவர் திரு.கு.ரவிச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்துக் கருத்துரை வழங்கினர். 

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் திரு.த.மலர்ச்செல்வன் அவர்கள் கலந்துசிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக ஆலய பரிபாலனசபைத் தலைவர் திரு.சி.தவராசா அவர்களும், பட்டிப்பளை கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் திரு.த.மேகராசா அவர்களும் ஆசிரிய ஆலோசகர் திரு.க.பரமானந்தம் அவர்களும், இலங்கை வங்கி முகாமையாள திரு.ஞா.அரவிந்தன் அவர்களும் பிரதேச சபை உறுப்பினர்; திரு.கு.வீரசிங்கம் அவர்களும் அதிபர் திரு.சா.விக்னேஸ்வரன் அவர்களும், அதிபர் திரு.மு.குணேசலிங்கம் அவர்களும் ஓய்வு நிலை அதிபர் திரு.மு.குணரெத்தினம் அவர்களும் கதிரவன் விளையாட்டுக் கழகத்தலைவர் திரு.கு.நமசிவாயம் அவர்களும், அம்பிளாந்துறை சமூகப்பணி ஒன்றியத்தின் தலைவர் திரு.க.கேசகப்போடி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இக்கூத்துருவாக்கத்தில் செயற்பட்ட கலைஞர்களான அண்ணாவியார் திரு.ப.கதிர்காமநாதன், அண்ணாவியார் திரு.சி.தீபன்;, ஏட்டாசிரியர் திரு.க.புவிக்குமார், திரு.ந.சங்கரப்ப்பிள்ளை - களரி முகாமைத் தலைவர கட்டியக்காரனுக்காடிய செல்வன் கு.துஷ;யந்தன், இராமருக்கு ஆடிய திரு.சு.சந்திரகுமார், சீதையாக ஆடிய திரு.அ.கந்தசாமி, இலச்சுமணனுக்கு ஆடிய திரு.பொ.புட்பேந்திரன், பரதனுக்கும் இராவண சன்னியாசிக்கும் ஆடிய திரு.த.பேரின்பராஜா, சத்துருக்கனுக்கு ஆடிய திரு.சி.கேதீஸ்பரன், தசரதனுக்கு ஆடிய திரு.வி.சசிகரன், கோசலைக்கும், திருச்சடைக்கும் ஆடிய திரு.த.முத்துலிங்கம், கைகேசிக்கும் மண்டோதரிக்கும் ஆடிய திரு.கி.பாஸ்கரன், சுமத்திரைக்கு ஆடிய திரு.சீ.அலெக்ஸ்சாண்டர், வசிட்ட முனிவருக்கும் விபீசணனுக்கும் ஆடிய திரு. அழகு தனு, கூனிக்கும் சூர்ப்பனகைக்கும் ஆடிய திரு.வே.சேதுராமன், இராவணனுக்கு ஆடிய திரு.ப.சசிதரன், கும்பகர்ணனுக்கு ஆடிய திரு.து.கௌரீஸ்வரன், அனுமாருக்கும், பறையறைவோனுக்கும் ஆடிய திரு.ப.சுரேஸ்குமார், சுக்கிரீபனுக்கு ஆடிய திரு.ப.றசிகரன் திரு. ம.கேதீஸ்வரன் - இந்திரஜித் ஆகியோர் மாண்புபெற்றனர். அண்ணாவியார் திரு.ப.கதிர்காமநாதனால் காப்பு விருத்தம் பாடி நிகழ்வு அரம்பமானது. இந்நிகழ்வில் வரவேற்பு நடனம் செல்வி பி.சேணுஜாவாலும், வரவேற்புரை அடிப்புற அரங்கச் செயற்பாட்டு பேரவையின் பொருளாளர் திரு.த.பேரின்பராஜாவாலும், நன்றியுரை அடிப்புற அரங்கச் செயற்பாட்டு பேரவையின் செயலாளர் அழகு தனுவாலும், ஒழுங்கமைப்பு அடிப்புற அரங்கச் செயற்பாட்டு பேரவையின் உபதலைவர் திரு.வி.சசிகரனாலும் இடம்பெற்றது. 

வெளியீட்டுரை ஆசிரியர் திரு. மா.ஜீவரெத்தினத்தாலும் சிறப்பாக ஆற்றப்பட்டது. 

இந்நிகழ்வில் ஊர்மக்கள், கலைஞர்கள் என அனைவும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.