பொத்திவில் நீதிமன்றத்தினால் அரியநேத்திரனுக்கு அழைப்பானை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொத்திவில்  நீதிமன்றதினால்  அழைப்பானை கையளிக்கப்பட்டது.  


அம்பாறை - பொத்திவில் பொலிஸாரால் இன்றைய தினம் (03) வெள்ளிக்கிழமை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளருமான பா.அரியநேத்திரனுக்கு பொத்திவில் பொலிஸாரினால் நீதிமன்ற அழைப்பானை அவரது இல்லத்தில் வைத்து கொடுக்கப்பட்டது. 

 குறித்த அழைப்பானையில் எதிர்வரும் 17.12.2021 காலை 9.00மணிக்கு சமூகம் கொடுக்குமாறு அழைப்பானையில் பொத்திவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எதிர்ப்பு போராட்ட பேரணியில் கலந்து கொண்ட குற்றத்திறகாக பொத்திவில்  நீதிமன்ற அழைப்பானை மூலம் கொடுக்கப்படுள்ளது.