மாநகரசபை உறுப்பினர் தவராஜாவின் நல்லடக்கம் நாளை


இலங்கை தமிழரசுக்கட்சியின் நீண்டகால உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழ்தேசிய பற்றாளருமான வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் நல்லடக்கம் நாளை திங்கட்கிழமை நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தனது 68ஆவது வயதில் காலமானார்.

கறுவப்பங்கேணியில் உள்ள அன்னாரின் பூதவுடல் அன்னாரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை திங்கட்கிழமை பிற்பகல் 2.00மணியள மட்டக்களப்பு மாநகரசபைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு கல்லியங்காடு இந்த மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.